கேஸ் சிலிண்டர் வேண்டுமா? இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை…

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். சிலிண்டர் சப்ளை குறைவால், முன்பதிவு செய்தும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ எனப்படும் இந்த சேவையின் மூலம், 10 கிலோ எடை கொண்ட எடை குறைவான காம்போசிட் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். குறிப்பாக, சமையல் செய்யும் போது திடீரென கேஸ் தீர்ந்துவிட்டால், இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலிண்டரை முன்பதிவு செய்த 3 முதல் 4 மணி நேரத்திற்குள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

‘இந்தியாஆயில் ஒன்’ செயலி, இந்தியாஆயில் கஸ்டமர் போர்டல் அல்லது 7588888824 என்ற வாட்ஸ்அப் எண்ணில் ரீஃபில் முன்பதிவு செய்யலாம். எடை குறைவானதால், காம்போசிட் சிலிண்டர்களை எளிதாக கையாளவும் முடியும்.

Related News

Latest News