அதிரடியாக குறையப்போகும் ‘தங்கம்’ விலை! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட ‘சூப்பர்’ அறிவிப்பு!

தங்கம் என்றாலே எப்போதும் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், இப்போது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை, நகைப்பிரியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த உச்ச விலையோடு ஒப்பிடும்போது, தங்கம் விலை சுமார் 37 சதவீதம் வரை சரிவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது பலரது நீண்டகால சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

உலகச் சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,063 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. லண்டன் புல்லியன் சந்தையின் நிலவரப்படி, ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சுமார் 7.8 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,857 டாலருக்கும் கீழே குறைந்தால், சரிவு இன்னும் தீவிரமடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அடுத்தகட்டமாக விலை 3,500 டாலர் வரை சரியக்கூடும். இது தங்கம் வாங்குபவர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், முதலீட்டாளர்களுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.

இந்தத் திடீர் விலை மாற்றத்திற்குப் பின்னணியில் பல உலகளாவிய பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன

மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு, கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பெரிய முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை மறுமதிப்பீடு செய்து, கோல்ட் இடிஎஃப் (Gold ETF) எனப்படும் தங்கப் பத்திர முதலீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். முதலீட்டு வரத்து குறைவது தங்கத்தின் மதிப்பை மேலும் சரிவுக்குக் கொண்டு செல்கிறது.

இருப்பினும், ஜப்பானிய யென் நாணயம் சர்வதேசச் சந்தையில் வலுவடைந்தால், இந்த விலை சரிவு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கம் 3,943 டாலருக்குக் கீழ் செல்லும் போதுதான், இந்த 37 சதவீத வீழ்ச்சிக்கான ஆரம்பப்புள்ளி அமையும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். எனவே, தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த விலைச் சரிவை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் கவனித்து நிதானமாக முடிவெடுப்பதே புத்திசாலித்தனம்.

Related News

Latest News