17.07.2026; நகை பிரியர்களே… தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் உலக நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது.

அதன்பின் நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளியின் விலை ரூ.2,35,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News