சென்னையில் தங்கம் விலை கடந்த 7-ந்தேதி வரை தொடர்ந்து குறைந்து வந்தது. அதன் பின்னர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை உயர்வை பதிவு செய்தது. இதன்படி, 10-ந்தேதி ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,350-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 11-ந்தேதி கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனையானது. நேற்றுவும் இதே விலையே நீடித்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
