09.07.2026; ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை… இன்று மீண்டும் சரிவு!!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று காலை முதலில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 குறைந்தது. பின்னர் மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130, சவரனுக்கு ரூ.1,040 குறைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த அறிவிப்பு சிறிது நேரத்திலேயே திருத்தப்பட்டு, இரண்டாவது குறைப்பு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கிராமுக்கு ரூ.80 மற்றும் சவரனுக்கு ரூ.640 மட்டுமே குறைந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் மூன்று முறை தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டது. மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.13,220-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட இந்த விலைச் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News