சென்னையில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. கடந்த 5-ந்தேதி வரை உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,560 மற்றும் ஒரு சவரன் ரூ.1,08,480 என்ற உச்சத்தை எட்டியது.
அதன்பின்னர் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.160 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மேலும் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலையில் ஏற்படும் இந்த மாற்றம் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.
