தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 2-ந்தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.13,550-க்கும், சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ரூ.1,08,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கிராமுக்கு மேலும் ரூ.150 உயர்ந்து ரூ.13,700-ஆகவும், சவரன் ரூ.1,09,600-ஆகவும் விற்பனையானது. பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்தது.
அதன்பிறகு நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சரிவு இன்று மேலும் தொடர்ந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,07,600-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.13,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்க நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
