பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.2,500 வழங்க அமைச்சர் அறிவிப்பு… எப்போது தெரியுமா?

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் தொடங்கப்பட்டபோது சுமார் ஒரு கோடி பெண்கள் பயனடைந்த நிலையில், பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த உதவித் தொகையை பெற்று வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தால் ‘மாண்புமிகு மகளிர்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தது.

தற்போது பழைய திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உதவித் தொகை எப்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூ.2,500 வழங்கும் ‘மாண்புமிகு மகளிர்’ திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு இந்த நன்மை உறுதியாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் சீர்’ திட்டமும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் முழுமையான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதில் ரூ.2,500 மகளிர் உதவித் திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News