இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது: வைகோ அறிவிப்பு!!!

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக தனியாக போட்டியிடாது என்று தெரிவித்தார்.

மேலும், தவெக கூட்டணி வெற்றி பெறுவதற்காக மதிமுக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, கூட்டணியின் வெற்றிக்காக முழு மூச்சாக உழைக்கும் என்றும் கூறினார்.

அதேவேளை, ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அரசியல் மோசடி என கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த கருத்துகள் மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இடைத்தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து அரசியல் ஆர்வலர்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related News

Latest News