30.06.2026; நகை வாங்க இது சரியான நேரமா? சவரன் எவ்வளவு தெரியுமா?

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்பட்டு வருகின்றன.

கடந்த 20-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனையான நிலையில், அதன்பிறகு விலை படிப்படியாகக் குறைந்தது. பின்னர் கடந்த 27-ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.70 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து ஒரு நாள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்திருந்தது. நேற்று மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.70 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்து ரூ.13,030-க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கத் திட்டமிட்டுள்ள நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News