தொகுப்பாளர் பிரியங்கா கர்ப்பமா? வைரலாகும் வீடியோ…

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்கும் பிரியங்கா தேஸ்பாண்டே. தொகுப்பாளினியாக இருக்கும் அவர், பல ஆண்டுகளாக சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கி உள்ளார்.

தனது இயல்பான நகைச்சுவை உணர்வு, துரிதமான பேச்சுத் திறன் மற்றும் உற்சாகமான தொகுப்புத் தன்மை காரணமாக அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த சூழலில், தொகுப்பாளினியான ப்ரியங்கா தேஷ்பாண்டேவுக்கும், டி.ஜே. வசி சச்சிக்கும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் தன் முதலாவது திருமண நாளை கொண்டாடிய ப்ரியங்கா தேஷ்பாண்டே ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு டான்ஸ் வீடியோவை போஸ்ட் செய்து தான் தாயாகவிருப்பதை அறிவித்திருக்கிறார். அதை பார்த்த ப்ரியங்காவின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,ரொம்ப மகிழ்ச்சி அக்கா. உங்களை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. வசி சச்சி மாம்ஸுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News