20.06.20206; தங்கம் விலை உயர்வு… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 15-ந்தேதி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,070 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,12,560 ஆகவும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை சரிவு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்றே நிம்மதியை அளித்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,08,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற நிலையிலும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000 என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News