13.06.2026; சற்றே உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டு வருகின்றன. கடந்த 10-ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.400 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.3,200 வரை சரிந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் மேலும் ஒரு கிராமுக்கு ரூ.300 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்ததால், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வைச் சந்தித்தது. நேற்று முன்தினம் எந்த அளவுக்கு விலை குறைந்ததோ, அதே அளவுக்கு நேற்று உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் இந்த திடீர் உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Related News

Latest News