சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
