சென்னையில் நாளை (ஜூன் 08) திங்கள்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.சென்னையில் உள்ள சித்தாலப்பாக்கம் திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்எஸ்என் பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொட்டியில் தண்ணீர் நிறப்புதல், மின்சாதனங்களை சார்ஜ் செய்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
