வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்

நாடு முழுவதும் லட்சக்கணக்கான புதிய ஊழியர்களின் EPFO கணக்குகளில் ரூ.3,000 தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களுக்காக ஒவ்வொரு மாதமும் EPFO கணக்குகள் தொடங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் EPFO-வில் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களின் கணக்கில் குறைந்தபட்சம் ₹3,000 செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களின் முதல் வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாவை அரசே ஏற்றுக்கொள்கிறது. அனைத்துத் துறைகளிலும் புதிய தொழிலாளர்களுக்கு ₹3,000 வரை அரசு பங்களிப்பு வழங்குகிறது. முதல் மாதச் சம்பளத்தை மூன்று தவணைகளாக EPFO கணக்கில் செலுத்தும் இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் ₹15,000 வரை பெறலாம். மாத சம்பளம் ₹1 லட்சம் வரை உள்ளவர்கள் இந்தத் தகுதியைப் பெறுகின்றனர்.டிசம்பர் மாதத்தில் EPFO-வில் இணைந்த 10 லட்சம் உறுப்பினர்களுக்கும் ஜூன் மாதத்தில் குறைந்தபட்சம் ₹3,000 அவர்களது PF கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு செல்லாமல் PF கணக்கிலேயே இருக்கும்

EPFO தற்போது பல முக்கிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விரைவில் PF பணத்தை ATM மூலம் எளிதாக எடுக்கும் வசதி அமலுக்கு வர உள்ளது. தற்போதுள்ள சிக்கலான நடைமுறைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய வசதி அறிமுகமாகும். மேலும், ‘Passbook Lite’ சேவை மூலம் உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்கலாம். வேலை மாறுபவர்களுக்கு ‘Annexure K’ பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைக்கும்.

Related News

Latest News