தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொட்டகுடி மலை கிராமம் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கிருந்து 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் போடிநாயக்கனூரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் பயின்று வருகின்றனர் கொட்டகுடியில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் இங்கிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் 2 முதல் 3 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து சென்று கொட்டகுடி பிரிவு அருகே குரங்கணி செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை கிராமத்தில் சுமார் 56 ஆண்டுகள் பேருந்து வேண்டுமென்று கோரிக்கை வைத்து நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனாலும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாத நிலையில் 2 முதல் 3 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து செல்ல வேண்டிய சூழல் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கொட்டக்குடிக்கு பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்பு தினமும் காலை மாலை குரங்கணிக்கு 56 பயணிகள் செல்லும் வசதி கொண்ட பேருந்து மாற்றப்பட்டு 45 பயணிகள் செல்லும் குறுகிய அளவு பேருந்து மூலம் கொட்டக்குடிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதுவரை பேருந்து தடமே கண்டறியப்படாத கொட்டகுடி மலை கிராமத்தில் முதன் முதலாக பேருந்து நுழைந்தது கண்டு மபை கிராம மக்கள் உணர்ச்சி பொங்க மிகுந்த மகிழ்ச்சியுடன் பேருந்து வரவேற்றனர்.
