சச்சினின் 36 ஆண்டுகால சாதனையை காலி செய்த வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில், வெறும் 15 வயதே ஆன இளம் இடதுகை பேட்டிங் சூறாவளி வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம், இந்திய அணியில் மிகக் குறைந்த வயதில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் மிகக் குறைந்த வயதில் சர்வதேசப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர் என்ற அசைக்க முடியாத சாதனை கடந்த 36 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. சச்சின் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி விளையாடினார். தற்போது வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, அஜித்பாபு அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வு குழுவால் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடித்து, இந்திய அணிக்குத் தேர்வான மிக இளம் வயது கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

Related News

Latest News