சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (ஜூன் 6) சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐந்து மணி நேரத்தில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
சோத்துப்பெரும்பேடு பகுதியில் குமரன் நகர் செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. பல்லாவரம் பகுதியில் பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை. தெய்வசிகாமணி தெரு. முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை ரேடியன்ஸ் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பஞ்செட்டி பகுதியில் தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனூர், புதுநகர், கரடிபுத்தூர், புத்தூர். என்.எம். கண்டிகை. கண்ணன்கோட்டை பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா பூவலம்பேடு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள சரஸ்வதிநகர் கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 4வது முதல் 10வது பிரதான சாலைகள் வரை ஆண்டாள் நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆர்ஏ சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன் வரை மின்தடை செய்யப்படுகிறது.
ராமாபுரம் பகுதியில் ஐ.பி.எஸ் காலனி, மணப்பாக்கம். முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மதியம் 2 மணிக்கு பிறகு வழக்கம் போல் மின்விநியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
