சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கருப்பு. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் பல காட்சிகள் டெலிட் செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில், பல செலிபிரிட்டிகள் சின்ன சின்ன கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவற்றில் பல காட்சிகள், படம் தியேட்டரில் வெளியாகும் போது கத்தரிக்கப்பட்டு விட்டன.
இது குறித்து கருப்பு படத்தின் படத்தொகுப்பாளர் கலைவாணன் தெரிவித்த பல தகவல்களை வைத்து பார்க்கையில், படத்தின் 20-30 விநாடிகளுக்கான காட்சி கத்தரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்னரும், ரிலீஸிற்கு பிறகும் பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் கருப்பு படம் உருவானது எப்படி என்பது குறித்தும், அதை சூர்யாவிற்கு முன்பு யாரிடம் கூறினார் என்பது குறித்தும் தெரிவித்திருந்தார். அப்போது, கருப்பு படம் தொடங்க காரணம், விஜய்தான் என்று அவர் கூறியதால் சூர்யாவின் ரசிகர்கள் பலர் கொதித்தெழுந்தனர். விஜய்யை முன்னிலைப்படுத்தி, சூர்யாவை பின்னுக்கு தள்ளியிருப்பதாக அவர்களுடைய கருத்து இருந்தது.
நடிகர் சூர்யா, திடீரென இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், அன்பை முன் நிறுத்துக்கள். பணிவாகவும், பெருந்தன்மையுடனும் இருங்கள் என்று பதிவிட்டிருந்தார். இது, ரசிகர்களை சூர்யா செல்லமாக அதட்டுவது போல இருப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர்.மேலும் கருப்பு திரைப்படம், சூர்யாவிற்கு கம்-பேக் படமாக அமைந்துள்ளது. இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.175 கோடி வசூலை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இப்படம் எப்போதோ ரூ.175 கோடியை கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
