ஆஃபர் தந்த பாஜக – ஏற்காத அண்ணாமலை – இன்னும் என்ன நடக்க போகுதோ?

தமிழக அரசியலில் எத்தனையோ திருப்பங்கள், அதிரடிகள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், கடந்த சில தினங்களாக அண்ணாமலை பாஜகவை விட்டு விலகுகிறார் என்ற செய்தி பரவியதும், தமிழகத்தில் உள்ள அவரது ஆதரவு மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் துணிந்தனர்.குறிப்பாக, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்படும் எனப் பலமுறை இழுத்தடிக்கப்பட்டதே அவரது இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ஒரு கட்சி வரப்போகிறது” என 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அது அண்ணாமலையைக் குறிவைத்து போடப்பட்டதுதான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.இதையெல்லாம் விடப் பெரிய ட்விஸ்ட், அண்ணாமலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 3 முறை ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது

தமிழகத்தில் பாஜகவுக்கென்று ஒரு பிரம்மாண்டமான இளைஞர் பட்டாளத்தையும், தீவிரமான ஆதரவாளர் வட்டத்தையும் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கியவர் அண்ணாமலை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணாமலை முற்றிலும் பா.ஜ.க-வை விட்டு வெளியேறினால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் பாஜக பெற்ற ஒட்டுமொத்த வளர்ச்சியும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும் என்று தேசியத் தலைமை பயப்படுகிறது. இதனால் பா.ஜ.க-வுக்குப் பெரும் நஷ்டமே ஏற்படும்.

அண்ணாமலைக்கு இந்தத் முடிவு சவால் நிறைந்த ஒன்றாக கருதப்பட்டாலும்,. பாஜக போன்ற ஒரு தேசியக் கட்சியின் பின்னணி இல்லாமல், திராவிடக் கட்சிகளும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருக்கும்போது, புதிய கட்சியைத் தொடங்கி நடத்துவது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், தமிழகத்தில் பாஜக என்ற லேபிளோடு பயணிப்பதை விட, ஒரு தனித்துவமான தமிழ்நாட்டுத் தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள அண்ணாமலை விரும்புகிறார்.

பாஜகவின் இந்துத்துவா பிம்பத்தைத் தாண்டி, அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் ஈர்க்க இந்தத் தனிப்பாதை அவருக்கு உதவக்கூடும். அதேநேரம், டெல்லி மேலிடம் தரும் தேசியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பாஜகவிலேயே நீடித்தால் அவருக்குப் பாதுகாப்பான எதிர்காலம் இருக்கும்.

Related News

Latest News