21.05.2026; நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றைய நிலவரம் விலை என்ன தெரியுமா?

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினந்தோறும் மாற்றம் நிலவி வருவதால் நகை வாங்கும் பொதுமக்கள் கவனமாக சந்தையை கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,870 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,18,960 ஆகவும் உயர்ந்திருந்தது. அதன் பின்னர் நேற்று தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. முன்தினம் உயர்ந்த அளவுக்கே அடுத்த நாளில் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,18,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்க திட்டமிடும் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில் வெள்ளி விலையில் இன்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.290 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

Related News

Latest News