15.05.2026; அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியதன் தாக்கமாக, கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 12-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையானது.

அதன் பின்னர் தங்கம் விலை திடீரென அதிகரித்து, நேற்று முன்தினம் மட்டும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,23,200-க்கும், ஒரு கிராம் ரூ.15,400-க்கும் விற்பனையாகியது. நேற்று மேலும் ரூ.400 உயர்ந்து, சவரன் ரூ.1,20,400 மற்றும் கிராம் ரூ.15,050 என்ற அளவை எட்டியது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிந்துள்ளது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.305-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.3,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரி உயர்வு காரணமாக சந்தையில் நிலவும் அதிர்வுகள் நகை விலைகளில் தொடர்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

Related News

Latest News