09.05.2026; தங்கம், வெள்ளி விலை – இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 4-ந்தேதி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கடந்த 5-ந்தேதி கிராமுக்கு ரூ.180 குறைந்து ஒரு கிராம் ரூ.13.820-க்கும், சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 1.10.560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 6-ந்தேதி ஒரே நாளில் 2 முறை விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. அதாவது, காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது. பின்னர் மாலை கூடுதலாக கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது.

கடந்த 7-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் அதே விலையில் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2.80.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News