தமிழகத்தில் யார் ஆட்சி? முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி…

தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை மையமாகக் கொண்டு தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால் ஆட்சியமைப்பதற்கான ஆதரவை பெற தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. இதில் காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சிறிய கட்சிகளாக கருதப்பட்ட இடதுசாரி மற்றும் விசிக போன்ற கட்சிகள் தற்போது “கிங் மேக்கர்” நிலைக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை பெற்ற தவெகவுடன் இணைவது, எதிர்கால அரசியலில் தங்களது தாக்கத்தை வலுப்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. எனினும், அதற்கும் விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.

இதனால், தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் சக்தியாக தற்போது இடதுசாரி கட்சிகளும் விசிகவும் உருவெடுத்துள்ளன. அவர்கள் எந்த அணிக்கு ஆதரவு வழங்கப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News