05.05.2026; நகை வாங்க சூப்பர் சான்ஸ்… அதிரடியாக குறைந்த தங்கம், இன்றைய விலை என்ன தெரியுமா ?

கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் சுமார் 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிய நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் அது 1.34 லட்சம் ரூபாயை எட்டியது. இந்த அதிரடி உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியது.

குறிப்பாக, ஈரான்–அமெரிக்கா இடையேயான பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் தங்கத்தின் விலையை பாதித்தன. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் விளைவாக தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறி, அதன் தேவை அதிகரித்தது.

ஆனால் இந்த உயர்வு நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் வாங்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்நிலையில், தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1,10,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நிலையாக இருந்த வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாயாக உள்ளது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 5,000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை சரிவு தற்காலிகமா அல்லது நீடிப்பதா என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

Related News

Latest News