30.04.2026; நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 25-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறத்தொடங்கியது.இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் விலை குறைந்தது.

அதாவது, 2-வது நாளாக நேற்றும் விலை சரிந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14.100-க்கும், ஒரு சவரன் ரூ.1.12.000 விற்பனையானது.

நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து மாலையிலும் விலை மேலும் குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13, 900-க்கும், ஒரு சவரன் ரூ.1.11.200-க்கும் விற்பனையானது.

அதாவது, கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2.640-ம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையாகிறது.

மேலும், தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும் பார் வெள்ளி 2.60.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News