தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுவதை மட்டுமே பார்க்க முடிகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து.
அதாவது, ஒரு கிராம் ரூ.14,320-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்ற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
