Escalator ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்கு?

வணிக வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டுகளின்(Escalator ) ஓரங்களில் இருக்கும் பிரஷ்கள், பலரும் நினைப்பது போல் காலணிகளைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டவை அல்ல.அது மிக முக்கியமான பாதுகாப்பு ஒன்றாக கருதப்படுகிறது

எஸ்கலேட்டரின் நகரும் படிக்கட்டுகளுக்கும், அதன் பக்கவாட்டில் உள்ள நிலையான தகட்டிற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருக்கும். நமது நீளமான ஆடைகளின் ஓரங்கள், ஷூ லேஸ்கள் அல்லது மென்மையான ரப்பர் காலணிகள் அந்த இடைவெளியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

அப்படி நடந்தால் பெரும் விபத்து ஏற்படும். இந்தப் பிரஷ்கள் ஒரு எச்சரிக்கையாகச் செயல்படுகின்றன. நமது கால் தவறுதலாக ஓரத்திற்குச் சென்றால், பிரஷ் உரசும் உணர்வு ஏற்பட்டு, நாம் அனிச்சையாக காலை விலக்கிக் கொள்வோம்..

Related News

Latest News