குறைவான விலையில் 7 சீட்டர் கார்கள்

இந்தியாவில் 7 பேர் பயணம் செய்ய கூடிய 7 சீட்டர் கார்களுக்கு எப்போதுமே அதிக தேவை இருந்து வருகிறது. ஆனால் 7 சீட்டர் கார்கள் என்றாலே விலை மிகவும் அதிகமாக இருக்கும் என பலரும் நினைத்து கொண்டுள்ளனர்.ஆனால் இது தவறு. ஏனெனில் இந்திய சந்தையில் ஏராளமான 7 சீட்டர் கார்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான க்ராவைட் இந்திய சந்தைக்கு புது வரவாக உள்ளது தற்போதைய நிலையில் இதன் விலை 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த 5 சீட்டர் கார் ஆனது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை விட மிகவும் குறைவான விலை ஆகும்.நிஸான் க்ராவைட் காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை விலை 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரிலும் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான பொலிரோ காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ காரின் வசதிகளை பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பார்க்கிங் சென்சார்கள், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் கார்களை வாங்க விரும்புபவர்கள் இந்த 3 கார்களை பரிசீலனை செய்யலாம். அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரையும் கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம். இந்த 7 சீட்டர் காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது.

Related News

Latest News