தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன், இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
”கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் மீசை ராஜேந்திரன், இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
