கேஸ் புக்கிங் பெயரில் மோசடி.! வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்

ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக LPG விநியோகம் பாதிக்கப்படும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் மக்கள் பதற்றமடைந்து அவசரமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையை சைபர் மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். “உடனடி கேஸ் புக்கிங்” என்று கூறி மக்களை ஏமாற்றி, அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடுகிறார்கள். இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) இதுகுறித்து சில ஆபத்தான போலி இணையதளங்களின் பட்டியலை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://indanegasservice.site/ 

https://samedaydgascylinder.co.in/ 

https://inoilpump2026.us.cc/register 

https://gasagencydealership.in/ 

https://www.indianoilcorporations.in

இந்த இணையதளங்களை பயன்படுத்தாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மோசடிக்காரர்கள் பொதுவாக எப்படிப் செயல்படுகிறார்கள்?

அவர்கள் கேஸ் ஏஜென்சி அதிகாரி போல நடித்துக் கொண்டு அழைப்பார்கள். உங்கள் மானியம் ரத்து ஆகும் அல்லது KYC புதுப்பிக்கவில்லை என்று பயமுறுத்துவார்கள். உடனே புக்கிங் செய்தால் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறி பணம் செலுத்த அழுத்தம் கொடுப்பார்கள். பேசிக்கொண்டே OTP, UPI PIN அல்லது வங்கி விவரங்களை கேட்பார்கள். சில சமயம் அறியாத லிங்குகளை அனுப்பி .apk கோப்புகளை பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள்; இதனால் உங்கள் மொபைல் ஹேக் ஆகும் அபாயம் உள்ளது.

உண்மையான இணையதளத்தை அடையாளம் காண சில வழிகள்:

எப்போதும் URL முகவரியை சரிபார்க்க வேண்டும்; HTTPS பாதுகாப்பு குறியீடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எந்த கேஸ் ஏஜென்சியும் OTP அல்லது வங்கி தகவல்களை கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெளிநாட்டு அல்லது அறியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான முறையில் கேஸ் புக்கிங் செய்ய:

பாரத் கேஸ் (BPCL) – my.ebharatgas.com, 1800 22 4344 வாட்ஸ்அப் எண், அல்லது “Hello BPCL” ஆப்
இண்டேன் கேஸ் (Indian Oil) – cx.indianoil.in, 7588888824 வாட்ஸ்அப் எண், அல்லது “Indian Oil One” ஆப்
HP கேஸ் (HPCL) – hindustanpetroleum.com/hp-gas, 9222201122 வாட்ஸ்அப் எண், அல்லது “HP Pay” ஆப்

மோசடியில் சிக்கினால் உடனடியாக செய்ய வேண்டியது:

உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கார்டு அல்லது நெட் பேங்கிங் சேவைகளை நிறுத்த சொல்லுங்கள். அனைத்து முக்கியமான ஆப்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களின் கடவுச்சொற்களை மாற்றுங்கள். உடனே 1930 என்ற சைபர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைக்கவும். மேலும் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.

Related News

Latest News