தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பாக, அதாவது 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News