ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், தனது பிரபலமான காம்பாக்ட் SUV மாடலான ஹூண்டாய் வென்யூவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களின் விலையை மார்ச் 2026-ல் மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். பெரும்பாலான வேரியண்ட்களில் ரூ.8,000 உயர்த்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்கள் மாற்றமில்லை.
புதிய வென்யூவின் HX5 1.2 பெட்ரோல் MT வேரியண்ட்டின் விலை ரூ. 20,000 என்ற மிகப்பெரிய விலை உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் புதிய விலை ரூ. 9.55 லட்சமாக உயர்ந்துள்ளது. அடுத்ததாக, HX6 1.0 டர்போ-பெட்ரோல் DCT மற்றும் HX6 1.0 டர்போ-பெட்ரோல் DCT டூயல்-டோன் ஆகிய இரண்டின் விலையும் தலா ரூ. 9,000 அதிகரித்துள்ளது. இதேபோல், HX5 1.0 டர்போ-பெட்ரோல் DCT வேரியண்ட்டின் விலையும் ரூ. 8,900 அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், வென்யூ வரிசையில் உள்ள HX2 டீசல் MT, HX5 டீசல் MT, HX5 டீசல் AT, HX7 டீசல் MT மற்றும் HX7 டீசல் MT டூயல்-டோன் உள்ளிட்ட பல்வேறு மாடல்களின் விலைகள் தலா ரூ. 8,000 உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், HX8 1.0 டர்போ-பெட்ரோல் DCT மற்றும் HX8 1.0 டர்போ-பெட்ரோல் DCT மாடல்களின் விலை, முந்தைய விலையை விட ரூ. 5,200 கூடுதலாக இருக்கும்.
