வந்தாச்சு புது ஏ.ஐ : இனி செல்போனிலேயே இசையமைக்கலாம்

கூகுள் நிறுவனம் “கூகுள் லைரியா 3 ப்ரோ” என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், பயனர்கள் தங்களின் திறனைப் பொருத்து எளிதாக இசையமைக்க முடியும்.

இந்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை புதிய இசைக்கோர்வைகளை உருவாக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் டீப்மைண்ட் (DeepMind) பிரிவு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மெசேஜ் அனுப்புவது போல எளிதாக தகவல்களை உள்ளிடுவதன் மூலம், படிப்படியாக இசைக்கோர்வைகள் உருவாகும். மேலும், இசையைப் புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டுதல்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், இசையில் சற்றே ஆர்வம் கொண்டவர்களுக்குக் கூட தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள இந்த கருவி உதவும். அதே நேரத்தில், முழுநேர இசையமைப்பாளராக விரும்புவோரும், இசைத்துறையில் முன்னேற நினைப்பவர்களுக்கும் “கூகுள் லைரியா 3 ப்ரோ” பயனுள்ளதாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related News

Latest News