ஈரான் அமெரிக்க போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாரா திருப்பதாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் குறைந்து 14,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில், கிராமுக்கு மேலும் 400 ரூபாய் குறைந்து 13,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் 5360 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
