ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி தீர்க்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிப்ரவரி 28 அன்று நடந்த முதல் தாக்குதலிலேயே, ஈரானின் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில், அந்த நாட்டின் பல முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (67) உயிரிழந்துள்ளார். கமேனிக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்த தலைவராக லாரிஜானி கருதப்பட்டவர்.

லாரிஜானி உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிந்திய ஒவ்வொரு ரத்தத்துளிக்கும் தகுந்த பழி வாங்கப்படும் என்றும், இந்தத் தியாகிகளின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் விரைவில் அதற்கான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தற்போதைய தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று சௌதி அரேபியா எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Related News

Latest News