இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

இஸ்ரேல் தாக்குதலில், ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையேயான போராட்டம் பிப்ரவரி 28 முதல் நடந்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு இடையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும், இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி ஈரான் அரசு இன்னும் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவத் தலைவர் கோலம்ரெசா சுலைமானி செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்த தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.

Related News

Latest News