ஜனநாயகனுக்கு அடுத்த சிக்கல் : ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்

ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன், உலகம் முழுவதும் ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால் கடைசி நேரத்தில் வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த படத்துக்காக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரூ. 500 கோடி வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் அமேசான் ப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News