வீட்டு எரிவாயு சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம் : இல்லத்தரசிகளை நோட் பண்ணுங்க

வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முன்பதிவு இடைவெளி 15 நாட்களிலிருந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு அடுத்த சிலிண்டரை பெற 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

இந்த புதிய விதியை செயல்படுத்த ஏஜென்சிகளின் மென்பொருள் உடனடியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பதிவு செய்யும் முறைமையில் எந்த மாற்றமும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பினால், சிலிண்டரை பெற்றவுடன் அடுத்த முன்பதிவை செய்யலாம்.

எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கான சில விதிகளை வகுத்துள்ளன. அதன்படி, ஒவ்வொரு நுகர்வோரும் ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்களை மட்டுமே வாங்க முடியும். கூடுதலாக 3 மானியம் இல்லாத சிலிண்டர்களையும் வாங்கலாம்.

முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் சிலிண்டர்களை டெலிவரி செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தியுள்ளன. இதனால் நுகர்வோருக்கு விரைவான சேவை கிடைக்கும்.

புதிய விதிப்படி, முதல் சிலிண்டர் கிடைத்த 21 நாட்களுக்கு பிறகே இரண்டாவது சிலிண்டர் வழங்கப்படும். இந்த நடைமுறை நிறுவனத்தின் மென்பொருளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சிலிண்டர்களுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை எனவும், நுகர்வோர் கவலைப்பட வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News