2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ஒரு கிராம் ரூ.15,200க்கும் சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,21,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து ஒரு கிலோ ரூ, 2,95,000க்கும் விற்பனையாகிறது.
