வீரர்களுக்கு அபராதம் விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. நடப்பு டி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News