அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 2) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,000 புள்ளிகளுக்குக் கீழ் தொடங்கியது. காலை 78,543.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ், காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,214.80 புள்ளிகள் குறைந்து 80,072.38 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 369.90 புள்ளிகள் குறைந்து 24,808.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
உலக நாடுகளிடையேயான போரால் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.
