நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு ரூ.2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
