இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து ரூ.14,930 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து ரூ.295 ஆக உள்ளது. மேலும், ஒரு கிலோ (பார்) வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
