சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
