சென்னை, எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை, 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் – புதுச்சேரி விரைவு ரயில்
சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில்
சென்னை எழும்பூர் – சேலம் அதிவிரைவு ரயில்
இந்த 8 அதிவிரைவு/விரைவு ரயில்கள் நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை கூடுதலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவுள்ளது.

