சென்னை, வளசரவாக்கம் பகுதியில் கான்கிரீட்டுகள் முழுமையாக உதிர்ந்து எலும்பு கூடு போன்று காட்சியளிக்கும் மின்சார ட்ரான்ஸ்பார்மரால் பொதுமக்களுக்கு அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் 153-வது வார்டு ஸ்ரீ லட்சுமி நகர் 6வது தெருவில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் ஒன்று அபாயகரமான நிலையில் இயங்கி வருகிறது. கான்கிரீட்டுகள் முழுமையாக உதிர்ந்து எலும்பு கூடு போன்று நிற்கும் ட்ரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் எந்த நேரமும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இது தொடர்பாக மாநகராட்சி தரப்பிலோ அல்லது மின்வாரியம் தரப்பிலோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் டிரான்ஸ்பார்மறை சீரமைப்பு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
