Sunday, February 15, 2026

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு., மத்திய கைலாஷ் பகுதியில் புதிய எல் வடிவ பாலம் திறப்பு

சென்னையில் அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. இந்த சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை தொடங்குகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலை சந்திப்பில் வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்வதற்காக 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் இருவழித்தடத்தில் வாகனத்தில் செல்லும் அளவிற்கு அகலமானதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

Related News

Latest News