Sunday, February 15, 2026

ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை., விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சி

நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கலால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகவில்லை.

’ஜனநாயகன்’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கனடா விநியோகஸ்தர் யார்க் சினிமாஸ் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை குறிப்பிட்ட திரையரங்குகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News